It is my pleasure to inform you all that our "Udhayam Welfare Foundation" is now registered.
At this time, I would like to thank all of you who were giving their support and guidance to achieve our goals to help the needy.
Intouch,
Mathi.
Rising of Solace
கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
நல்லவை என்று நமக்கு தெரிந்தவற்றை நாம் செய்வதற்கு ஒன்று கூடிய உள்ளங்களின் உள் உணர்வின் உதயம். நம் தேவைகள் நிறைந்த பின் பிறர் வாழ்வாதாரத்திற்காக நம்மால் இயன்றதை இயன்ற வகையில் இயன்ற நேரத்தில் செய்திட ஏற்படுத்த பட்ட குழுமம் தான் உதயம் .
தற்பொழுது இக்குழுமம் செய்ய விழையும் பணிகளாவன ஆதரவு நாடுவோர் இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று ஆதரவு தெரிவிப்பது மற்றும் அவர்களுக்கு உதவுவது. இவை எங்களது முதற் கட்ட பணிகளாகும் . வரும் காலங்களில் மேலும் பல சிறப்பான பணிகள் புரியும் சிந்தனை உள்ளது. இவ்வண்ணமான பணிகளை செய்வதில் ஈடுபாடு கொண்ட நெஞ்சங்கள் எங்களது குழுவில் சேர்ந்திட அன்புடன் அழைக்கிறோம். சேர்ந்திட விழைவோர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். (udhayamwelfarefoundation@gmail.com)
குழுவில் சேராமலும் தாங்கள் உதவி புரியலாம். தங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை மேற்கண்ட முகவரிக்கு தெரிய படுத்தலாம். உதயம் நற்பணி குழுமத்தின் மாதாந்திர இதழ் ஒன்றும் வெளயிடும் திட்டம் உள்ளது.
தங்கள் தமிழ் படைப்புகள் இந்த இதழில் இடம் பெற மேற்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
இப்படிக்கு,
உதயம் நற்பணி குழு.